அபராதம் செலுத்த மறுத்ததால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டேன் – பழங்குடியினப் பெண் (காணொளி)

அபராதம் செலுத்த மறுத்ததால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டேன் – பழங்குடியினப் பெண் (காணொளி)

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2014 | 3:16 pm

​மேற்கு வங்கத்தில் 13 பேரால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பழங்குடியினப் பெண், தனது நிலை குறித்து இந்திய ஊடகமொன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தான் ஒருவரைக் காதலித்ததாகவும் அதன் காரணமாக, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அபராதத் தொகையைத் தன்னால் செலுத்த முடியாதென மறுத்ததால் தன்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர், அப்பெண் கடின வேலைகளில் ஈடுபடும் ஒரு பழங்குடியினப் பெண் என்ற காரணத்தினாலேயே இவ்வாறான கொடூர சம்பவத்தின் பின்னரும் உயிர் தப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காண்க காணொளி;

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்