கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் சில எச்சங்கள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் சில எச்சங்கள் மீட்பு

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மேலும் சில எச்சங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 4:18 pm

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் ஒன்பதாவது நாளாகவும் இன்று அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய அகழ்வுப் பணிகளின்போதும் சில எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 8.30 தொடக்கம் முற்பகல் 11.30 வரை மன்னார் நீதவான் முன்னிலையில் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த மனித புதைகுழியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது  மேலும் ஒருவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் பகுதி வீதியூடாக நீர்க்குழாய்களை பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால் இந்த மனித புதைகுழி அவதானிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்