மனைவி சடலமாக மீட்கப்பட்ட சோகத்தில் சுகயீனமுற்ற இந்திய மத்திய அமைச்சர்

மனைவி சடலமாக மீட்கப்பட்ட சோகத்தில் சுகயீனமுற்ற இந்திய மத்திய அமைச்சர்

மனைவி சடலமாக மீட்கப்பட்ட சோகத்தில் சுகயீனமுற்ற இந்திய மத்திய அமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 4:58 pm

இந்திய மத்திய அமைச்சர் சசி தரூர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி  மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் நேற்று இரவு நட்சத்திர ஹோட்டலொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவி வருவதுடன் , அது ஒரு  தற்கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சசிதரூர் இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , அவசர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை வழங்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சசி தருருக்கும், பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளருக்கும் இடையில் உறவு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது மனைவியான சுனந்தா புஷ்கரின்  சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்