தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பம்

தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பம்

தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 1:36 pm

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலமைத்துவ பயிற்சித் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இன்று  ஆரம்பமாகியுள்ளது

நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 21 மத்திய நிலையங்களில் இந்த தலைமைத்துவ பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் பெப்ரவரி ஏழாம் திகதி வரை மூன்று வாரங்களுக்கு தலைமைத்துவ பயிற்சியின் மூன்றாம் கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ள மாணவர்களுக்கு பயிற்சிகளின் பின்னர் அதற்கான கால அவகாசம் வழங்கப்படும் என   உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இந்த தலைமைத்துவ பயிற்சியில்  அனைத்து மாணவர்களும் பங்குபற்ற வேண்டுடியது அவசியம் எனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்