தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை திங்கள் முதல்

தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை திங்கள் முதல்

தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை திங்கள் முதல்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 2:27 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில்  தபால்மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

பெப்பரவரி மாதம் ஏழாம் திகதி வரை தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கலாம் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த இரண்டு மாகாணங்களையும் சேர்ந்த அரச ஊழியர்கள் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று ஆரம்பமானது.

சுயேட்சைக் குழுக்கள் பெப்ரவரி ஐந்தாம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள்  எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்