இலங்கை மீனவர்கள் 61 பேர் விடுதலை

இலங்கை மீனவர்கள் 61 பேர் விடுதலை

இலங்கை மீனவர்கள் 61 பேர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2014 | 5:24 pm

இந்திய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 61 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழகத்தின் இருவேறு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

தூத்துக்குடி நீதிமன்றத்தினால் 59 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை மத்திய சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த மீனவர்கள் கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மற்றுமொரு நீதிமன்றத்தினால் மேலும் 2 இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்