பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

பராக்கிரம சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 1:57 pm

பொலன்னறுவை, பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த வான்கதவுகள் இன்று முற்பகல் திறக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதனால் சமுத்திரத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.

அத்துடன் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்