நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் காப்பற்றப்பட்டனர்; திருமலையில் சம்பவம்

நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் காப்பற்றப்பட்டனர்; திருமலையில் சம்பவம்

நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் காப்பற்றப்பட்டனர்; திருமலையில் சம்பவம்

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 1:37 pm

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்த நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதேவேளை, குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் மேலும் 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் காப்பற்றப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பகுதியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த சிறுவர்களே நேற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்