நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 4:56 pm

நாட்டையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அனைவரும் தமது உரிமைகளுடன் வாழ வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கிராமங்கள், நகரங்கள் மாத்திரமன்றி தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கும் நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தினைத் தெரிவித்தார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தி, நாட்டை பின்தள்ளுவதற்கு எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கு நாட்டிலுள்ள புத்திசாலித்தனமான மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்  எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்க்கட்சிகளின் கொள்கைகளை இன்று மக்கள் நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இனம் மற்றும் மதம் என்ற பேதமற்ற சிறந்ததொரு நாட்டில் அடுத்த தைப்பொங்கலை கொண்டாடுவதற்காக இயலுமை ஏற்பட்டும் என்றும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்