கொஸ்கொட ஆமைகள் பராமறிப்பு நிலைய உரிமையாளர் கைது

கொஸ்கொட ஆமைகள் பராமறிப்பு நிலைய உரிமையாளர் கைது

கொஸ்கொட ஆமைகள் பராமறிப்பு நிலைய உரிமையாளர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 6:33 pm

கொஸ்கொட ஆமைகள் பராமறிப்பு நிலைய உரிமையாளர், மாத்தறை பிராந்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையத்தில் இருந்த வெள்ளை ஆமை திருட்டுப் போயுள்ளதாக போலியான முறைப்பாட்டை செய்தமை மற்றும் அந்த நிலையத்திலிருந்த அமைகளைத் துன்புறுத்தும் வகையில் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரை பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொஸ்கொட ஆமைகள் பராமறிப்பு நிலையத்திலிருந்த வெள்ளை ஆமையொன்றை திருடியதாக அந்த நிலையத்தின் உரிமையாளரால் அண்மையில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பாடகர் அமர் பெரேராவிடமும் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.

ஆயினும் ஆமைகள் பராமறிப்பு நிலைய உரிமையாளரது மகளின் வீட்டிலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட வெள்ளை ஆமையை பொலிஸார் மீட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்