எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 12:58 pm

புதிய  அரசியல் அமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பான பொதுசன வாக்கெடுப்பில் இரண்டாவது நாளாகவும் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்  இந்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

எகிப்தில் அரசியல் நெருக்கடிகள் தொடரும் நிலையில்,  நேற்றைய தினமும்  வாக்கெடுப்பு நடத்தப்’பட்டிருந்தது.

எகிப்தில் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வாக்கெடுப்பை பகிஷ்கரித்துள்ளது.

இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சியின் ஆட்சி அதிகாரத்தின்போது நிறைவேற்றிய அரசியலமைப்பை இதன் மூலம் மாற்றியமைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகாரத்திலிருந்து  நீக்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.

எனினும் இடைக்கால அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் சகோதாரத்துவக் கட்சியினர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்