இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; இரு தரப்புப் பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; இரு தரப்புப் பேச்சுவார்த்தை இன்று

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; இரு தரப்புப் பேச்சுவார்த்தை இன்று

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 9:01 am

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையில்  இன்று பேச்சுவார்த்தை  முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தியாவின் டெல்லி நகரில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இன்று 10 மணியளவில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக செயலாளர் நரேந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை சார்பில் கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்திய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்றும் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய  மற்றும்   இலங்கை  மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் அதிகரித்துவருகின்ற நிலையில் 2  நாட்டு மீனவர்களும் அடிக்கடி கைதுசெய்யப்பட்டுவருகின்றனர்.

இந்த  நிலையில் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப்பெற்றுக்கொள்ளும் நோக்கில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்