அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணக் கொடுப்பனவு

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 3:39 pm

அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட முற்பணக் கொடுப்பனவுகளை வழங்குமாறு சகல திணைக்கள தலைவர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இதற்கான சுற்றுநிருபம் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக இந்தக் கொடுப்பனவுகள் யாவும் வழங்கப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருட ஆரம்பத்தில் அரச ஊழியர்களுக்கு ஏற்படும் பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் அத்தியாவசிய செலவுகளை ஈடுசெய்யும் விதத்தில் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

வழங்கப்படுகின்ற விசேட கொடுப்பனவானது, மாதாந்த சம்பளத்திலிருந்து தவணைக் கட்டண அடிப்படையில் மீள அறவிடப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்