அக்கரைப்பற்று வாகன விபத்தில் இருவர் பலி

அக்கரைப்பற்று வாகன விபத்தில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2014 | 9:18 am

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

74 மற்றும் 30 வயது மதிக்கத்த இருவரே நேற்று மாலை இடம்பெற்ற  இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த கெப் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்