ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் – ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் – ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் – ஹக்கீம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 8:24 pm

மேல் மாகாணத்தில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சின்னத்தில்  தனித்து போட்டியிடுமென அந்த கட்சி இன்று அறிவித்துள்ளது.

கண்டி -மடவல மதீனா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

ரவுப் ஹக்கிம் தெரிவித்த கருத்து :-

“மாகாணச் சபை தேர்தல்களில் விஷேடமாக மேல் மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு 3 ஆசனங்களை வெற்றிக் கொண்டது.இதே போன்று தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடுவதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும்.இதற்காக 3 மாவட்டங்களுக்குமான வேட்பு மனுக்களை தயாரிப்பதற்காக விஷேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.தென் மாகாணத்தில் போட்டியிடுவது தொடர்பில் மீண்டும் கட்சியின் உயர் பீடம் கூடி தீர்மாணிக்க உள்ளது”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்