விரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க விசேட செயற்திட்டம்

விரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க விசேட செயற்திட்டம்

விரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க விசேட செயற்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 9:18 pm

விரைவுத் தபால் சேவையை உரியமுறையில் முன்னெடுப்பதற்கு விசேட செயற்றிட்டமொன்றை தபால் திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் கடிதங்களை 24 மணித்தியாலங்களுக்குள்  விநியோகிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டார்.

தற்போது இந்த நடவடிக்கை பரீட்சார்த்த ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நடைமுறையிலுள்ள விரைவுத் தபால் சேவையின் ஊடாக முன்னரை விடவும், அதிகளவிலானவர்கள் பயனை பெறுவதாக தபால் மாஅதிபர் மேலும் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்