வரி எல்லைகளை மீறும் நிறுவனங்களை கண்டறிய நடவடிக்கை

வரி எல்லைகளை மீறும் நிறுவனங்களை கண்டறிய நடவடிக்கை

வரி எல்லைகளை மீறும் நிறுவனங்களை கண்டறிய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 2:10 pm

இந்த வருடம் அமுல்படுத்தப்படவுள்ள வரி திருத்தத்திற்கு அமைய, வரி எல்லைகளை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை கண்டறிவதற்கான துறைசார் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருத்தங்களுக்கு அமைய, வரி செலுத்த வேண்டியவர்களின் பட்டியலில் மேலும் சிலர் இணைந்து கொள்வார்கள் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மல்லிகா சமரசேகர குறிப்பிட்டார்.

அவ்வாறானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு புதிய ஆவணங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமென அவர் சுட்டிக்காட்டினார்.

வரி வருமானம் மூலம் 15 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

சில்லறை வியாபாரிகளை இலக்காகக்கொண்டு, இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்