ரத்துபஸ்வெல மக்களுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை

ரத்துபஸ்வெல மக்களுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை

ரத்துபஸ்வெல மக்களுக்கு நீர் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 7:02 pm

ரத்துபஸ்வெல பகுதி மக்களுக்கு மூவாயிரம் ரூபா நிவாரண கட்டணத்தில் நீர் இணைப்பு வழங்குவதற்கு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக வெலிவேரிய ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி விகாரையின் விகாராதிபதி குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது, அவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரண கட்டணத்திலும், சமுர்த்தி பயனாளிகளுக்கு 2000 ரூபாவிற்கும் நீர் இணைப்பு வழங்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.

ரத்துபஸ்வெல மக்கள் நீர்ப் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், அந்தப் பொறுப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்