பொறுப்புக்களை ஏற்பதற்கு தாம் தயார் –  ராகுல் காந்தி

பொறுப்புக்களை ஏற்பதற்கு தாம் தயார் – ராகுல் காந்தி

பொறுப்புக்களை ஏற்பதற்கு தாம் தயார் – ராகுல் காந்தி

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 9:02 pm

எந்தவித பொறுப்புக்களை ஏற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாக இந்தியக் காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை  நடைபெறவுள்ள இந்திய காங்கிரஸ் கட்சியின்  சந்திப்புக்கு முன்னதாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரிடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாம் காங்கிரஸ்சின் ஒரு சிப்பாய் எனக் கூறியுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் வழங்கும் உத்தரவிற்கு கீழ்படிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் தம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் எந்தபணியானாலும் அதனை நிறைவேற்ற தயாராகவுள்ளதாக அவர் கூறியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்