பலன்டோர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசம்

பலன்டோர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசம்

பலன்டோர் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 2:40 pm

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான பலன்டோர் விருதை போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சுவீகரித்துள்ளார்.

பார்சிலோனாவில் லியனல் மெஸி மற்றும் பேயான் மியூனிஸ் வீரர் பிராங் றிபோரி ஆகியோரை தோற்கடித்து அவர் இந்த விருதை தனதாக்கியுள்ளார்.

2008 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை வென்றெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பயிற்றுவிப்பாளர்கள், அணிகளின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஜேர்மனி மகளிர் கால்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளர் நதீன் அங்கரர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்