சீனாவில் வைத்தியருக்கு மரணதண்டனை

சீனாவில் வைத்தியருக்கு மரணதண்டனை

சீனாவில் வைத்தியருக்கு மரணதண்டனை

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 3:40 pm

சீனாவில் கடத்தல்காரர்களுக்கு குழந்தைகளைத்  விற்பனை செய்த பெண் வைத்தியருக்கு ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளைக் கடத்தி, விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த வைத்தியர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு பிறக்கும் குழந்தைகள் கடுமையாக சுகவீனமுற்றுள்ளதாக பெற்றோருடம் தெரிவித்து, குழந்தைகளை அவர் திருடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஷீயாங் சூசியா என்ற குறித்த வைத்தியருக்கு 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினாவில் ஒத்துவைக்கப்பட்ட மரண தண்டனை, பொதுவாக ஆயுட் தண்டனையாக மாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்