எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பு இன்று

எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பு இன்று

எகிப்தில் புதிய அரசியலமைப்பு மீதான வாக்களிப்பு இன்று

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 4:23 pm

எகிப்தில் புதிய  அரசியல் அமைப்பை ஸ்தாபிப்பது தொடர்பான பொதுசன வாக்கெடுப்பு  இன்று இடம்பெற்றுவருகின்றது.

அரசியல் நெருக்கடிகள் நீடிக்கும் நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தும் எண்ணத்தில் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் எகிப்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சியின் ஆட்சி அதிகாரத்தின்போது நிறைவேற்றிய அரசியலமைப்பை இதன் மூலம் மாற்றியமைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

எகிப்தில் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வாக்கெடுப்பை பகிஷ்கரித்துள்ளது.

அதிகாரத்திலிருந்து  நீக்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்