இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை; ராஜித்த இந்தியா விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 10:30 am

இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தமைக்காக கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள 212 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் விடுதலை தொடர்பில் இந்திய விவசாய அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை மீனவர்களின் 40 படகுகள் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய விவசாய அமைச்சரின் அழைப்பிற்கு அமைய, கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் தாம் உள்ளிட்ட குழுவினர் இன்று இந்தியா செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இலங்கை மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்களின் படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் ஏ.எஸ் கான் நியூஸ் பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் தம்மை சந்தித்து, மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வீ. மகாலிங்கம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்