அம்பலன்கொட வீடொன்றில் இருந்து வெள்ளை ஆமை மீட்பு

அம்பலன்கொட வீடொன்றில் இருந்து வெள்ளை ஆமை மீட்பு

அம்பலன்கொட வீடொன்றில் இருந்து வெள்ளை ஆமை மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2014 | 7:33 pm

கொஸ்கொட ஆமை பராமரிப்பு நிலைய உரிமையாளரது மகளின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை ஆமை தொடர்பாக மாத்தறை பிரிவிற்குப் பொறுப்பான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே கொஸ்கொட ஆமை பராமரிப்பு நிலையத்திலிருந்து காணாமல்போன வெள்ளை ஆமையாக இது இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொஸ்கொடயில் காணாமல் போன வெள்ளை ஆமை 9 கிலோகிராம் எடைகொண்டது என்பதுடன், இன்று மீட்கப்பட்ட ஆமை 5 கிலோகிராம் எடையுடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பகுதி ஆமை பராமரிப்பு நிலையத்தில் இருந்த வெள்ளை ஆமையொன்று கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி இரவு அடையாளம் தெரியாதோரால் திருடப்பட்டிருந்ததாக பொலஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்