ஹோமாகம பிரதேச சபை தவிசாளரின் பதவி காலம் நீடிப்பு

ஹோமாகம பிரதேச சபை தவிசாளரின் பதவி காலம் நீடிப்பு

ஹோமாகம பிரதேச சபை தவிசாளரின் பதவி காலம் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 7:11 pm

இம்மாதம் 30 ஆம் திகதி வரை தவிசாளராக தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கு ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளர் ஏ.டி.குமாரசிறியிற்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்தபோதே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

ஹோமாகம பிரதேச சபையின் இந்த வருடத்திற்கான வரவு- செலவுத் திட்டம் 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பிரதேச சபையின் தவிசாளர் பதவி   தொடர்பில் அண்மையில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது

வரவு- செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டு 14 நாட்கள் வரை தவிசாளராக  பதவி வகிக்க உள்ளுராட்சி மன்ற சட்டத்தின்கீழ் தமக்கு அதிகாரம் உள்ளதாக ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளர் தமது  மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்

எனினும் பிரதிவாதிகள் அதற்கு இடையூறு விளைவித்து வருவதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளர் பதவி வெற்றிடமாகவில்லை என தெரிவித்து பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.

ஹோமாகம பிரதேச சபை, அதன் உறுப்பினர்கள், பதில் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர் உள்ளிட்ட 30 பேர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்