மங்கள சமரவீரவின் இரகசியம் வெளியானது

மங்கள சமரவீரவின் இரகசியம் வெளியானது

மங்கள சமரவீரவின் இரகசியம் வெளியானது

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 12:57 pm

பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் வீட்டிற்குள் நுழைந்து மடிகணனி மற்றும் வெளிநாட்டு மதுபானத்தை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்டதாக கூறப்படும் மடிகணணியானது, தமது தரப்பினருடன் நீண்டகாலமாக மங்கள சமரவீர வைத்திருந்த பாலியல்  ரீதியான தொடர்பினால் பரிசளிக்கப்பட்டதென சந்தேகநபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய அறிவித்துள்ளார்

பணம் இல்லாத சந்தர்ப்பத்தில் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் சந்தேகநபர்   குறித்த மடிகணணியை அடகு வைத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய, விடயங்களை கேட்டறிந்த பாணந்துறை நீதவான் ருச்சிர வெலிவத்த தலா 25,000 ரூபா  2 சரீரப் பிணைகளிலும், 5,000  ரூபா ரொக்கப் பிணையிலும் சந்தேகநபரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

மங்கள சமரவீரவிற்கும், தனது கணவருக்கும் இடையில் காணப்பட்ட உறவு தொடர்பில் சந்தேகநபரின் மனைவி, விரிவான சத்திய கடதாசியொன்றை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அதுதொடர்பில் விசாரணை நடத்துமாறு  வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பிலும், சத்திய கடதாசி தொடர்பிலும் வாழைத்தோட்ட பொலிஸார் உரிய விசாரணையை முன்னெடுக்காவிடின், அதுதொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்வதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்