மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைப்பு

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 9:06 am

தென் மற்றும் மேல் மாகாண சபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தென் மாகாண சபை நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டதாக மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய குறிப்பிட்டார்.

மேல் மாகாண சபையை நேற்று நள்ளிரவு கலைத்ததுடன், அதுதொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுனரின் செயலாளர் சுனில் அபேவர்த்தன தெரிவித்தார்.

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் 2013 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புக்கு அமைய நடைபெறும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதன் பின்னர், ஒரு வாரத்திற்குள் தேர்தல்கள் ஆணையாளர் வேட்புமனு கோரப்படும் திகதியை அறிவிப்பார் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

தேர்தல் அறிவித்தல் வெளியிடப்பட்டு ஐந்து தொடக்கம் எட்டு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்