தமிழக, இலங்கை மீனவர்கள் விடுதலை

தமிழக, இலங்கை மீனவர்கள் விடுதலை

தமிழக, இலங்கை மீனவர்கள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 6:59 pm

தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 20 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இவர்களுடைய படகுகள் எதவும் விடுவிக்கப்படவில்லை என சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லாஹ் கான் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானரை தமிழக மீனவர் பிரதிநிதிகள் சிலர் இன்று சந்தித்துள்ளனர்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களுடைய படகுகளை விடுவிக்குமாறு அவர்கள் மகஜர் ஒன்றை கையளித்ததாக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லாஹ் கான் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழக மீனவர்கள் 20 பேரை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

கடந்த நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக யாழ் இந்திய துணைத் தூதுவர் வேங்கடாசலம் மகாலிங்கம் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்

இவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைப்பது தொடர்பில் இந்திய கரையோர பாதுகாப்பு படையினருடனும் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 32  மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்