தங்கம் கடத்த முயன்ற பெண் கைது

தங்கம் கடத்த முயன்ற பெண் கைது

தங்கம் கடத்த முயன்ற பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 10:36 am

சட்டவிரோதமாக ஒரு கிலோகிராம் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுசெல்வதற்கு முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்தப் பெண் மும்பை செல்வதற்கு தயாராகவிருந்ததாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.

அவரிடம் இருந்த தங்கத்தின் பெறுமதி 53 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவித்தது.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக லெஸ்லி காமினி மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்