சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 6:39 pm

சுகாதார ஊழியர்களுக்கான சீருடை, தொலைபேசி மற்றும் மேலதிக  கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தாதி, குடும்ப சுகாதார சேவை, பொது சுகாதார பரிசோதகர், மலேரியா மற்றும் யானைக்கால் நோய் ஒழிப்பு பிரிவு, குடம்பிகள் ஆய்வு உதவியாளர்கள், பாடசாலை பல் வைத்தியர்கள், கால்நடை வைத்தியர்கள், மிருக வைத்திய கட்டுப்பாட்டாளர், சுகாதார சாரதி மற்றும் கனிஷ்ட சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கான சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறையில் நோய் ஒழிப்புப் பிரிவில் இணைந்துள்ள பயிலுநர் வைத்தியர்களுக்கும் மாதாந்த கொடுப்பனவை வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் தொலைபேசி கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தவிர புற்றுநோய் வைத்தியசாலை போன்று விசேட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள், நிறைவுகாண் மற்றும் மேலதிக வைத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார கணிஷ்ட ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைய புதிய கொடுப்பனவு நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்