சிரியா குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி

சிரியா குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி

சிரியா குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 6:10 pm

சிரியாவின்  மத்திய ஹோம்ஸ் நகரில் நடத்தப்பட்ட மோட்டார் குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக அரச அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என்று அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிரியாவில் தொடரும் மோதல்களால் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜனாதிபதி பஷார் அல் அஷ்ஷாட் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்