கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி இளைஞன் பலி

கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி இளைஞன் பலி

கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி இளைஞன் பலி

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 5:19 pm

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆறாவது மோடையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த ரயில் ஒன்றில் ஓடிச் சென்று ஏறுவதற்கு முயற்சித்த போது குறித்த இளைஞன் விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞன் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மருதானை ரயில் தரிப்பிடம் வரை செலுத்தப்பட்ட ரயில் ஒன்றிலே இவர் ஏறுவதற்கு முயன்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்