ஏரியல் ஷெரோனின் இறுதிக்கிரியை இன்று

ஏரியல் ஷெரோனின் இறுதிக்கிரியை இன்று

ஏரியல் ஷெரோனின் இறுதிக்கிரியை இன்று

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2014 | 3:34 pm

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோனின் இறுதி கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

கடந்த 8 வருடங்களாக கோமா நிலையிலிருந்த  ஏரியல் ஷெரோன் , தனது 85 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார்.

இறுதி சடங்குககள் இன்று நடைபெறவுள்ள நிலையில் ஜெருசலேமின் மேற்குப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  வீதிகள் பல மூடப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக சுமார் 20 நாடுகளின் உலக தலைவர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர்.

இதற்காக அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்ரேல் சென்றுள்ளதாகவும், அவர் இந்த விஜயத்தின் போது அந்நாட்டு தலைவர்களை  சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆண்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஏரியல் ஷெரோன்  அதன் பின்னர் சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இஸ்ரேல் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இராணுவ வீரராக அர்ப்பணித்த ஏரியல் ஷெரொன், பின்னர் அரசியல்வாதியாக இஸ்ரேலின் ஆட்சிப் பொறுப்புக்கு தெரிவாகியிருந்தார்.

2001 ஆம் ஆண்டு இஸ்ரேலின் 11 ஆவது பிரதமராக ஏரியல் ஷெரோன் பதவியேற்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்