லயன் ஏயார் விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு

லயன் ஏயார் விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு

லயன் ஏயார் விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மக்கள் பார்வைக்கு

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 8:15 pm

இரணைதீவு கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளுவதற்காக, அந்த விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இந்த பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த லயன் ஏயார் விமானம் இரணைதீவு பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலைமையில் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏயார் விமானத்தின் பாகங்களை தேடும் பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி பாதுகாப்பு பிரிவினர் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடமைகள் மற்றும் பெண்ணொருவரின் அடையாள அட்டை ஆகியன இதன்போது  மீட்கப்பட்டிருந்ததாக கடந்த ஆண்டு பாதுகாப்பு பிரிவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலைமையில் குறித்த பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்கள்
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இன்று வைக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தலைமையிலான குழுவினர் குறித்த லயன் ஏயார் விமானத்தில் பயணித்தவர்களை அடையாளம் காணப்பதற்காக இந்த தடயப் பொருட்களை மக்களின் பார்வைக்காக வைத்துள்ளனர்.

இந்த தடயப் பொருட்கள் மக்களின் பார்வைக்காக யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக நாளைய தினமும் வைக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்