ரயில் தண்டவாளங்களை விற்பனை செய்த நபர் கைது

ரயில் தண்டவாளங்களை விற்பனை செய்த நபர் கைது

ரயில் தண்டவாளங்களை விற்பனை செய்த நபர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 10:09 am

ரயில் தண்டவாளங்களை துண்டாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் தகவல்களை திரட்டியுள்ளனர்.

சாவகச்சேரி, நுனாவில் மேற்கு பகுதியில் லொறியொன்றில் ரயில் தண்டவாள துண்டுகளை ஏற்றிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் 265 ரயில் தண்டவாள துண்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்