மேல் மற்றும் தென் மாகாண சபையை கலைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

மேல் மற்றும் தென் மாகாண சபையை கலைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

மேல் மற்றும் தென் மாகாண சபையை கலைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 3:34 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமது மாகாண சபையை கலைப்பதற்கான எழுத்துமூல இணக்கம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு அமைய மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக தென் மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம் முதலமைச்சர் என்ற ரீதியில் தென் மாகாண சபையைக் கலைப்பதற்கான இணக்கத்தை ஆளுநரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை தென் மாகாண சபையின் ஆயுட்காலம் இருக்கின்ற போதிலும், அதற்கு முன்னர் அரசியல் தீர்மானத்திற்கு அமைய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தமது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல் மாகாண சபையைக் கலைப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்றும் நடத்தப்படுகின்றது.

மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் காலஅவகாசம் இருக்கின்றபோதிலும், அதனைக் கலைப்பதற்குரிய இயலுமை காணப்படுவதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மாகாண சபையைக் கலைப்பது தொடர்பில் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடல்களின் விளைவாக இன்று அந்தந்த கட்சிகளின் நிலைப்பாடுகள் தெரிவிக்கப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் மாகாண சபையைக் கலைப்பதற்கான தீர்மானம் தொடர்பில் ஆளுநருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்