மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பதற்கு முதலமைச்சர்கள் இணக்கம்

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பதற்கு முதலமைச்சர்கள் இணக்கம்

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பதற்கு முதலமைச்சர்கள் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 7:14 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளை கலைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் ஆவணங்களில் மாகாண முதலமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

மேல் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கும் ஆவணத்தை மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவுக்கு அனுப்பிவைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

இந்த ஆவணம் நாளைய தினம் ஆளுநரிடம் கையளிக்கப்படும் என மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் சுனில் அபேவர்தன குறிப்பிட்டார்.

இதேவேளை, தமது மாகாண சபையை கலைப்பதற்கான எழுத்துமூல இணக்கத்தை  ஆளுநரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாண முதலமைச்சரின் ஆவணம் இன்று தமக்கு கிடைக்கும் என தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாகாண சபையை கலைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்