முதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

முதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

முதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 6:50 pm

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

ஒக்லேண்டில்  நடைபெற்ற இந்த போட்டியில் 190 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி , 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் நியூஸிலாந்தின் , நதன் மெக்லம் 4 விக்கட்டுக்களையும் , ஜேம்ஸ் நீஷாம் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூஸிலாந்து அணி , 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ப்ரென்டன் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்