மன்னரில் விசேட தேவையுடையோருக்கு பயிற்சித் திட்டம்

மன்னரில் விசேட தேவையுடையோருக்கு பயிற்சித் திட்டம்

மன்னரில் விசேட தேவையுடையோருக்கு பயிற்சித் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 8:13 pm

உலக வங்கியின் நிதி உதவியுடன், சமூக சேவைகள் அமைச்சு மன்னார் மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான பயிற்சித் திட்டமொன்றை இன்று ஆரம்பித்துள்ளது.

விசேட தேவையுடையவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள பயிற்சி நிலையம் மன்னார் விசேட தேவையுடையோர் நிலையத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பயிற்சித் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான யோசனைத் திட்டமொன்றை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்