பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு சிறை

பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு சிறை

பாவனைக்கு உதவாத நெத்தலி; சந்தேகநபருக்கு சிறை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 9:19 am

பாவனைக்குதவாத நெத்தலி அடங்கிய கொள்கலனுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைப்பற்றப்பட்ட கொள்கலனில் இருந்த சுமார் 8 முதல் 10 தொன்கள் நெத்தலியை அழித்துவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் கம்பஹா மாவட்ட பிரதம அதிகாரி ரஞ்சித் வீரவர்தன குறிப்பிட்டார்.

சந்தேகநபருக்கு ஐந்து வருடத்தால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன், பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாவனைக்குதவாத நெத்தலி அடங்கிய கொள்கலன் வத்தளை பகுதியில் கடந்த புதன்கிழமை கைப்பற்றப்பட்டது.

இவற்றை புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்