நில்வெல்ல ஆழ்கடலில் கைகலப்பு; ஒருவர் பலி

நில்வெல்ல ஆழ்கடலில் கைகலப்பு; ஒருவர் பலி

நில்வெல்ல ஆழ்கடலில் கைகலப்பு; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 9:35 am

திக்வெல்ல, நில்வெல்ல ஆழ்கடலில் படகொன்றில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

படகிலிருந்த ஒருவர், அதிலிருந்த ஏனைய மூவருடன் ஏற்படுத்திக்கொண்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தாக்குதலுக்கு இலக்கான ஏனைய இருவரும் கடலில் குதித்து, மற்றுமொரு படகின்மூலம் கரைக்குத் திரும்பியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்