தொழிற்சங்க நடவடிக்கையில் தேசிய நீர்வழங்கல் சபை

தொழிற்சங்க நடவடிக்கையில் தேசிய நீர்வழங்கல் சபை

தொழிற்சங்க நடவடிக்கையில் தேசிய நீர்வழங்கல் சபை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 9:04 am

கோரிக்கைகள் சிலவற்றை அடிப்படையாகக்கொண்டு சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் மேற்கொண்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கொழும்பு மாவட்ட தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரை சாதகமான பதில் எதனையும் வழங்கவில்லை என தேசிய நீர்வழங்கல் சபையின் தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் நிஹால் லியனாராச்சி குறிப்பிடுகின்றார்.

சமமான மேலதிக கொடுப்பனவு, 2 வருடமாக பிற்போடப்பட்டு வரும் 8 வீத கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயினும், தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், பாவனையாளர்களுக்கு தடையின்றி தமது சேவையை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்