கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 2:18 pm

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8 வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், நீரை அள்ளுவதற்கு முற்பட்டபோது கிணற்றில் விழுந்துள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அண்மையில் பெய்த மழையினால் கிணற்றில் நீர் நிரம்பியிருந்ததாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அயலவர்கள் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்