காணாமல்போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்; விசாரணைகள் அடுத்த வாரம்

காணாமல்போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்; விசாரணைகள் அடுத்த வாரம்

காணாமல்போனோர் தொடர்பில் முறைப்பாடுகள்; விசாரணைகள் அடுத்த வாரம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 9:53 am

காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வாய்மூல விசாரணை அமர்வுகள் அடுத்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

குறிப்பாக முறைபாடுகளை முன்வைக்குமாறு கடந்த வருடத்தில் 3 தடவைகள் மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவிற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைத்ததாக அதன் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறைபாடுகள் தொடர்பான வாய்மூல விசாரணைகளை முதலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம், 19 ஆம், 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் கட்டம் கட்டமாக இந்த விசாரணை அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்