கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான பட்டப்பை அமுல்படுத்த திட்டம்

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான பட்டப்பை அமுல்படுத்த திட்டம்

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான பட்டப்பை அமுல்படுத்த திட்டம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 5:39 pm

கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடவிதானங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கும் எண்ணியுள்ளதாக தேசிய கல்வி நிறுவகம் குறிப்பிடுகின்றது.

இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இவ் வருடத்திற்குள் முன்னெடுக்கவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அபேரத்ன பண்டார தெரிவித்தார்.

கல்வியியல் கல்லூரிகளின் ஊடாகவே பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தும் பொருட்டு, புதிதாக பாடவிதானமொன்றை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சரும், பிரதி கல்வி அமைச்சரும் தனக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்