ஐ.பி.எல் 2014 – புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்

ஐ.பி.எல் 2014 – புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்

ஐ.பி.எல் 2014 – புது மாற்றங்கள் தொடர்பான முழுவிபரம்

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2014 | 11:28 am

ஏழாவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் தெரிவு முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

நடப்புச் சாம்பியனான மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

இதேவேளை, தங்களது முந்தைய அணியில் உள்ள வீரர்களை புதிதாகத் தெரிவு  செய்யும் அணியில் அதிகபட்சமாக 5 பேரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இதன் அடிப்படையில் தங்கள் அணியில் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்களின் பட்டியலை அணிகள் சமர்பித்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக : சென்னை அணியில் கேப்டன் தோனி, அஸ்வின், ஜடேஜா, ரெய்னா, டுவைன் பிராவோ ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துகொண்டுள்ளது.

மும்பை அணி சார்பாக : ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், கிரான் போலார்ட், லசித் மலிங்க மற்றும் அம்பாட்டி ராயுடு ஆகிய 5 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டது.

ராஜஸ்தான் ரோயல்ஸ்அணி சார்பாக : ஷேன் வேட்சன், ஜேம்ஸ் ஃபால்க்னர், அஜிங்க்யா ரஹானே, ஸ்டுவாட்ர் பின்னி மற்றும் சஞ்சு சம்சன் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர்.

ரோயல்ஸ் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக : விராட் கோலி, கிறிஸ் கெய்ல், மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக : தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேவிட் மிலர், மனன் வோரா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக : கேப்டன் கௌதம் கம்பீர், சுனில் நரைன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக : ஷிகர் தவனும், பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெல்லி டேர்டெவில்ஸ் அணிசார்பாக முந்தைய அணியில் விளையாடிய யாரையும் அவ்வணி தக்க வைத்துக்கொள்ள விரும்பவில்லை மாறாக புதிய அணி, ஏலத்தின் மூலம் தேர்வு செய்யப்படும்’ என்று டெல்லி அணி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்