யாழ். கட்டளை தளபதியாக உதய பெரேரா பொறுப்பேற்கவுள்ளார்

யாழ். கட்டளை தளபதியாக உதய பெரேரா பொறுப்பேற்கவுள்ளார்

யாழ். கட்டளை தளபதியாக உதய பெரேரா பொறுப்பேற்கவுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 10:35 am

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின்  கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா இன்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா, இதற்கு முன்னர் செயற்பட்டு வந்ததாக இராணுவ ஊடகப்  பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின்  கட்டளை தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தின் பிரதம நிறைவேற்று ஜெனரலாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்