முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 3:25 pm

கெஸ்பேவ, முகத்துவாரம் மற்றும் சபுகஸ்கந்த பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்காக பணம் கோருவதாக மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பி.என். அயிலப்பபெரும குறிப்பிடுகின்றார்.

இந்தப் பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் பணம் பெற்றுக்கொண்டதாக தொலைபேசி ஊடாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கூறுகின்றார்.

பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது அதிபர்கள் அறவிடமுடியும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்