மன்னார் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு

மன்னார் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு

மன்னார் சுகாதார ஊழியர்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 12:48 pm

மன்னார் மாவட்ட சுகாதார ஊழியர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை, முசலி பிரதேச சபை ஆகியவற்றைச் சேர்ந்த தற்காலிக அமைய சுகாதார ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சுகாதார ஊழியர் நியமனம் தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட வார்த்தமானி அறிவித்தலை கவனத்திற்கொள்ளாது தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கில் அசாதாரண சூழல் நிலவிய காலப் பகுதியிலும் தாம் சேவையாற்றியதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற சுகாதார ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் மாவட்ட தற்காலிக மற்றும் அமைய சுகாதார ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஊழியர்களின் கோரிக்கையை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதுடன், விரைவில் உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதாகவும் அதிகாரிகள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.

இந்த உறுதிமொழியை அடுத்து மன்னார் மாவட்ட தற்காலிக, அமைய சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்