வருடாந்தம் புகைத்தலால் 20,000 பேர் பலி –  சுகாதார அமைச்சு

வருடாந்தம் புகைத்தலால் 20,000 பேர் பலி – சுகாதார அமைச்சு

வருடாந்தம் புகைத்தலால் 20,000 பேர் பலி – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2014 | 7:55 pm

புகைத்தலால் மாத்திரம் வருடாந்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தை போதைப் பொருளற்ற சமூகத்தை கட்டியெழுப்பும் வருடமாக பிரகடனப்படுத்தி பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று நடைபெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாகாண சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா வடக்கு பிரதேசத்தை மதுபானம் மற்றும் புகைத்தல் அற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என பிரதேச செயலகம், சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் ஊழியர்களும் மாணவர்களும் இன்று சங்கற்பம் பூண்டனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தரங்கின்போது இந்த சங்கற்பம் எடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார.

மீள்குடியேற்றப்பட்ட பிரதேசத்தில் மது மற்றும் புகைத்தலை தடுப்பதன் மூலம் பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்த முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்